துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
நடிகர் விஜய் சேதுபதி ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழ் தொடங்கி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அவரது சினிமா எல்லை விரிந்து கொண்டே செல்கிறது. படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது திரையுலக நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பார். அந்த வகையில் நேற்று மதியம் நடிகை குஷ்புவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த செய்தியை புகைப்படத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள குஷ்பு, ''விஜய் சேதுபதி மதிய உணவு சாப்பிட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நிறைய பேச்சுக்களுடன் கூடிய எளிய வீட்டு உணவு. ஒரு சாதாரண நாளை மிகச்சிறந்த நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய்'' என்று பதிவிட்டுள்ளார்.