பேண்டசி படத்தில் தர்ஷன் | தமிழுக்கு வரும் கன்னட நடிகை சான்யா | 30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி | இனி இணைந்து பயணிப்போம்: தயாரிப்பாளர் சங்கம், பெப்சி கூட்டுப் பேட்டி | பிளாஷ்பேக்: வாழ்வே மாயத்தை உல்டா பண்ணிய ஆர்.சி.சக்தி | பிளாஷ்பேக்: ஜாதகத்தை விமர்சித்த படம்: 3 மொழிகளில் வெளியானது | மற்ற மொழிகளில் 50 கோடி வசூலித்த 'லோகா' | 25 வருடங்களை நிறைவு செய்த 'ரிதம்' | செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' |
விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடித்தார். அந்த வகையில் விஜய்க்கு மட்டுமின்றி விஜயசேதுபதியின் நடிப்புக்கும் தியேட்டர்களில் பலத்த கைதட்டல் கிடைத்து வருகிறது. விஜயசேதுபதியும் பிரபலமான நடிகர் என்பதால் அவருக்கும் விஜய்க்கு இணையான காட்சிகளை கொடுத்து படமாக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில், அடுத்தபடியாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் விஜய். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதாவது, அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அதே அருண்விஜய்யே விஜய்-65ஆவது படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும். அதோடு, மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.