ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி நாற்காலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்..,
நாற்காலி படமானது அமைதிபடை படம் போல அரசியல் நய்யாண்டியுடன் கூடிய படம். இந்த படத்தில் நான் எம்.ஜி.ஆரின்.ரசிகனாக நடித்துள்ளேன். இந்த படம் முழுக்க அரசியல் நையாண்டியுடன் கூடிய படம். ஆனால் யாரையும் காயபடுத்தாத அளவிற்கு இருக்கும். எம்.ஜி.ஆரின் பெருமைகள் தொடர்பான படம் என்பதால் முதல்வர் இந்த பாடலை வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் நினைத்தார்.
எம்.ஜி.ஆர். என்பவர் அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும். சட்டமன்ற தேர்தலுக்காக இந்த படம் எடுக்கபடவில்லை . அமைதி படைக்கு பிறகு அரசியல் நய்யாண்டியுடன் கூடிய திரைபடம் வரவில்லை.
தமிழக அரசியலிலும்,சினிமாவிலும் எம்.ஜி.ஆரை தவிர்த்து பேச முடியாது. அதனால் தான் இன்றைய நிலையிலும், அவர் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. அரசியல் என்றாலே அது எம்.ஜி.ஆர் தான் எனத் தெரிவித்தார்.