கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
பொதுவாக நடிகைகள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடிய வர்கள். யாரையாவது காதலித்தால் உடனே அவர்களின் பெயரை தங்களது உடம்பில் ஏதாவரு ஒரு பகுதியில் பச்சைக்குத்திக்கொள்வார்கள். அப்படித்தான் முன்பு பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சைக் குத்திக்கொண்டார் நயன்தாரா. காதல் முறிந்த பிறகு அந்த பெயரை வேறு டாட்டூவாக மாற்றினார்.
அதேபோல்தான் கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதையடுத்து முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக வனிதாவை நோக்கி ஏராளமான விமர்சனக்கணைகள் பாய்ந்தன.
ஆனபோதும் கலங்காத வனிதா, பீட்டர் பாலுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வனிதா-பீட்டர் பாலின் உறவும் முடிவுக்கு வந்து, வனிதாவை விட்டு வெளியேறினார் பீட்டர் பால்.
ஆனால் வனிதாவும், பீட்டர் பாலும் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது ஒருவர் பெயரை இன்னொருவரின் கையில் பச்சைக்குத்திக்கொண்டனர். இந்நிலையில் தற்போது தனது கையில் உள்ள பீட்டர்பாலின் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார் வனிதா. அதை மாற்றுவதையும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதோடு, இனிமேல் யாருடைய பெயரையும் எனது கையில் பச்சைக்குத்த மாட்டேன் என்றும் உறுதி எடுத்துள்ளார் வனிதா.