மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
கடந்த 2019ல் வெளியான காளிதாஸ் படத்திற்கும் அதில் கதாநாயகனாக நடித்த பரத்தின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் இருக்கும் பரத், தற்போது 'யாக்கை திரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக சோனாக்சி சிங் ராவத் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் நடிக்கிறார்.
இக்லூ என்கிற படத்தை இயக்கிய பரத் மோகன் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜன-4ஆம் தேதியன்றே துவங்கியது. இந்தநிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா கிளம்பிசென்றுள்ள பரத், தான் கொல்கத்தா வந்தடைந்த விபரத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.