இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

வலிமை படத்தில் நடித்து வரும் அஜீத் தற்போது, படப்பிடிப்பிற்கு சில நாட்கள் ஒய்வு கொடுத்துவிட்டு வாரணாசிக்கு சுற்றுலா கிளம்பி சென்றுள்ளார். வாரணாசியில் சுதந்திர மனிதராக சுற்றி பார்த்த அஜீத். அங்கே தின்பண்டங்களுக்கு பெயர் பெற்ற கொடோவிலா மற்றும் தாஸ்வமேதா ஆகிய பகுதிகளில் உள்ள கடைப்பகுதிக்கு விசிட் அடித்தார். அங்கே உள்ள தெருவோர ஸ்வீட் கடை ஒன்றில் அங்கு புகழ்பெற்ற பனாரஸி ஸ்வீட் ஒன்றை வாங்கி ரசித்து சாப்பிட்டுள்ளார் அஜீத்.. தலையில் தொப்பியுடன் மற்றும் முக கவசம் அணிந்திருந்தத அஜீத், ஸ்வீட் சாப்பிடும்போது தனது முக கவசத்தை அகற்றியுள்ளார்.
அப்போது அவர் முகம் வெளிப்படவே, அதுவரை அவரை யாரோ ஒருவர் என நினைத்திருந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரிக்கு வந்திருப்பது அஜீத் என்பதை எளிதில் கண்டுகொள்ள முடிந்ததாம். அதுமட்டுமல்ல, தனது கடையின் பனாரஸி ஸ்வீட்டை அஜித் ரசித்து சாப்பிட்டதுடன், கடையின் வெளியே நின்றுகொண்டே சாப்பிட்ட எளிமையும் சுபம் கேசரியை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அந்த பனாரசியின் சுவைக்காகவே மறுநாள் அதே கடைக்கு வந்த அஜீத், அந்த ஸ்வீட் எப்படி செய்வது என்கிற விளக்கத்தையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டாராம்..
அஜீத்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதுடன் இந்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார் கடைக்காரர் சுபம் கேசரி. தனது நண்பர்கள் சிலருடன் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அஜித் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தாராம்.