சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் பிரமாண்ட படம் சலார். ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரசாந்த் நீல் இயக்குகிறார். இன்று நடக்கும் பூஜையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. இன்று நடந்த பூஜையில் கர்நாடக மாநில துணை முதல்வர்சி.என். அஸ்வத்நாராயண் ,இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர் யஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பாகுபலி 2ம் பாகத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. மற்ற மொழிகளில் டப் செய்யப்படுகிறது. சலார் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயாராகிறது. படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு படப்பிடிப்புக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.