ஒரே நாளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'டிராகன், நீக்' | 'கேம் சேஞ்ஜர்' பாடல்கள்: நடன இயக்குனர்களை குறை சொன்ன தமன் | குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்பட மாக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமலஹாசன் ஆகியோர் முயற்சித்தினர். அவர்கள் முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பொன்னியின் செல்வனை இரண்டு பாகமாக எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்னொரு குழுவினர் பொன்னியின் செல்வனை வெப்சீரிசாக தயாரிக்கிறார்கள். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். எடர்னிட்டி மோஷன் கிராஃப்ட் பிரைவேட் லிமிடட் மற்றும் எடர்னிட்டி ஸ்டார் இணைந்து இந்த வெப் சீரிஸைத் தயாரிக்கிறது.
இது குறித்து இயக்குனர் அஜய் பிரதீப் கூறியதாவது: உலகமே கொண்டாடும் காவியமான அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் திரைக்காவியமாக வேண்டும் என்பது மறைந்த நடிகர் எம்ஜிஆரின் கனவு. அக்காவியத்தின் மீது அவர் கொண்ட தீராக் காதலால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுப்பதற்கான உரிமையைப் பெற்றுவைத்திருந்தார். பின்னர், அவரே அந்த உரிமையை தேசியமயமாக்கி கலைஞர்களுக்கு வாயில்கதவைத் திறந்துவைத்துச் சென்றார். எம்ஜிஆரின் மனதுக்கு நெருக்கமான அவரது வாழ்நாள் கனவான அந்த விஷயம் நனவாகவிருக்கிறது.
பொன்னியின் செல்வன் என்ற தலைப்புடன் சிரஞ்சீவி என்ற வார்த்தையை இணைத்து சிரஞ்சீவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இதனை உருவாக்குகிறோம். 125 மணி நேரம் ஓடும் முழுநீளத் திரைப்படமாகவே எடுக்கப்படவிருக்கிறது. ஆனால் அதை அப்படியே திரைப்படமாக ரிலீஸ் செய்வது சாத்தியமில்லை என்பதால், அதை வெப் ஃபிலிம் சீரிஸாகக் குறுக்கி பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த வெப் சீரிஸானது முதல் 4 மாதங்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும். 4 மாதங்கள் கழித்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரம் என மாதம் தலா 8 மணி நேரம் ஒளிபரப்பாகும். மொத்தம் 9 சீசன்களாக ஒளிபரப்பாகும். ஒவ்வொரு சீசனுக்கும் இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. என்றார்.