ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

தேனி அருகே உள்ள சீவலம்பட்டியை சேர்ந்தவர் ராம்சந்த். இவர் தனது பெயரை தேனிபாலா என்று மாற்றிக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இயக்குனர் கலைப்புலி சேகரனிடம் உதவியாளராக பணியாற்றினார். பிறகு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். ஒரு பூ ஒரு துப்பாக்கி என்ற படத்தை இயக்கி அதில் நடித்தார். கடைசியாக திருமாயி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி பாலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்தபுற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். 46 வயதான தேனி பாலாவுக்கு செல்வி என்ற மனைவியும் பரிமளாதேவி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.