அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
தமிழ் சினிமா உலகம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த பத்து மாதங்களாக ஏறக்குறைய முடங்கிய நிலையில் தான் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அதிகம் வரவில்லை.
இதனிடையே, பொங்கலுக்கு வெளியாகும் 'மாஸ்டர், ஈஸ்வரன்' படங்கள் மூலம் ரசிகர்களை வரவழைக்க முடியும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என இரண்டு படங்களுக்குமான முன்பதிவு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
'ஈஸ்வரன்' படத்தை வெளிநாடுகளில் திரையிட முடியாத காரணத்தால் அதன் தயாரிப்பாளர் பணம் கட்டி படத்தைப் பார்க்க ஒரு ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தார். அதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, தமிழ்நாட்டில் தியேட்டர் வெளியீடுதான் முக்கியம் என வெளிநாடு ஓடிடி வெளியீட்டை நிறுத்துவதாக அறிவித்தார் தயாரிப்பாளர்.
இப்போது அடுத்த சிக்கலாக 'ஈஸ்வரன்' படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிடுவதற்கான பணிகளை 'க்யூப்' நிறுவனம் ஆரம்பிக்கக் கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
சிலம்பரசன் நடித்து வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படப் பிரச்சினை ஒன்று அதன் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கும், சிலம்பரசனுக்கும் இருக்கிறதாம். அந்தப் பிரச்சினையை காரணம் காட்டி இன்னும் அந்த விவகாரம் முடியவில்லை என இப்போது வெளிவர உள்ள 'ஈஸ்வரன்' படத்தின் வெளியீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாம் தயாரிப்பாளர் சங்கம்.
2017ல் வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்குப் பிறகு சிலம்பரசன் நடித்த 'செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன்' ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. இப்போது, 'ஈஸ்வரன்' படத்திற்கு ஏன் இப்படி சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று விசாரித்துப் பார்த்தால் அதற்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை காரணம் சொல்கிறார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை எதிர்த்து சிலம்பரசன் அப்பா டி.ராஜேந்தர் ஒரு அணியை அமைத்து போட்டியிட்டார். பின்னர், போட்டியாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்திலேயே, ஒரு தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டிய ஒரு சங்கமே, அவரது படம் வெளியாவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் என டி.ராஜேந்தர் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 'ஈஸ்வரன்' படம் அன்றைய தினம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது இன்று தெரிந்துவிடும்.