ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா. தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். குட்டி ராதிகாவை கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி 2வது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
தற்போது குட்டி ராதிகா ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார். பெங்களூரில் பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜோதிடர் யுவராஜ் சாமி என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குட்டி ராதிகாவுக்கு 1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இதனை குட்டி ராதிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஜோதிடர் தயாரிக்கும் படத்திற்கு சம்பளமாகத்தான் அந்த பணத்தை பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் குட்டி ராதிகாவிடம விசாரணை நடத்தினார்கள். முன்னாள் முதல்வரின் மனைவி மோசடி வழக்கில் சிக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த குமாரசாமி "நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களை பற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்" என்று கோபத்தோடு கூறினார்.