துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கிய குற்றம் 23 படம் அருண்விஜய்க்கு திருப்பம் தந்த படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அருண் விஜய்யின் 31வது படத்தை இயக்கி முடித்துள்ளார் அறிவழகன்.
இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார், ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் 2018ல் மிஸ் இண்டியா பட்டம் பெற்ற ஸ்டெபி படேல் தமிழுக்கு வருகிறார். முன்னதாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த படமும் குற்றம் 23 போன்றே க்ரைம் த்ரில்லர் படம். அது மெடிக்கல் த்ரில்லர். இது எந்த மாதிரியான த்ரில்லர் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.