ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இணையதளத்தில் மாஸ்டர் பட காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. ஒன்றரை வருட உழைப்பு தயவு செய்து யாரும் அதை பகிர வேண்டாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர். படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக கிட்டத்தட்ட நம்மவர் படத்தில் கமல் நடித்தது மாதிரியான ஒரு வேடத்தில் நடித்துள்ளார் விஜய். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்னையால் முடங்கியது. இப்போது பொங்கல் வெளியீடு ஜன., 13ல் வெளியாகிறது.
கொரோனா பிரச்னை இன்னும் முழுமையாக தீராத காரணத்தால் தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே இருக்கைகள் உடன், கூடுதல் காட்சிகளுடன் படம் வெளியாக உள்ளது. படத்தை திரையில் காண விஜய் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். மேலும் இது விஜய் படம் என்பதால் ரசிகர்கள் தவிர்த்து பொது ஜன மக்களும் படத்தை காண வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் லீக் ஆனது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் படக்குழு மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியாகினர். இதையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ''மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை தயவுசெய்து யாரும் பகிராதீர்கள். மாஸ்டரை உங்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடம் உழைத்துள்ளோம். காரணம் தியேட்டரில் நீங்கள் அனைவரும் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான். இன்னும் ஒரு நாள் தான் அதன் பின் மாஸ்டர் உங்களுடையது. அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று தயாரிப்பு நிறுவனமும், ''மாஸ்டர் லீக்கான காட்சிகளை யாரும் பகிராதீர்கள், அப்படி அதுமாதிரியான காட்சிகளை கண்டால் @blockxpiracy.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளது.