தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது. மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுடன் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின்படி கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கூடுதலாக அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கோ அல்லது 5 மணிக்கோ காட்சிகள் ஆரம்பமாகும். அதன்பின் 7 அல்லது 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடக்கும். படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி 6 காட்சிகள் வரை நடைபெறம்.
தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து கூடுதலாக நள்ளிரவு 1 மணி காட்சியை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அதனால், 'மாஸ்டர்' படம் வெளியாகும் 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 6 அல்லது 7 காட்சிகள் வரை நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பல ஊர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெறுதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.