கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தவர் ஜெயராம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் சில வருடங்களுக்கு முன்பே ஒரு பக்கக் கதை படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் பட வெளியீடு மிகவும் தாமதமாகி கடந்த மாதம்தான் ஓடிடியில் வெளியானது.
ஆனால், மலையாளத்தில் சில படங்களில் நாயகனாக நடித்து முடித்துவிட்டார் காளிதாஸ். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காளிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை சமீபத்தில் சந்தித்த அனுபவத்தை டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “நீங்கள் நினைத்த சில விஷயங்கள் சிறப்பாக நடக்கும் போது... மாஸ்டரைச் சந்தித்த மாணவன். விஜய் சார், உங்கள் நேரத்திற்கும், முயற்சிகளுக்கும் நன்றி, நிறைய அர்த்தத்துடன்...” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் காளிதாஸ்.
இன்றைய டிரென்டிங்கில் காளிதாஸ் நிச்சயம் வந்துவிடுவார்.