Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆனந்தி திருமணம் செய்து கொண்டது யாரை தெரியுமா?

08 ஜன, 2021 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-whom-Anandhi-marry?

தெலுங்கு படத்தில் நடித்து பொறியாளன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ஆனந்தி. பிரபுசாலமன் இயக்கிய கயல் படம் தோல்வி அடைந்தாலும் ஆனந்திக்கு அடையாளம் கொடுத்தது. அதன் பிறகு விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார். வளர்ந்த வரும் நிலையில் ஆனந்தி நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆனந்தியின் சொந்த ஊரான தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட ஒரு சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்தி திருமணம் செய்து கொண்டிருப்பது சாக்ரட்டீஸ் என்பவர். இவர் ஆனந்தியின் உறவினர் என்றும் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல. இது காதல் திருமணம்.

சாக்ரட்டீஸ் இயக்குனர் நவீனின் மைத்துனர். நவீன் இயக்கிய அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரட்டீஸ் இணை இயக்குனராக பணியாற்றினார். இந்தப் படத்தில் ஆனந்தி நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உருவாகி உள்ளது. அதுதான் இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. சாக்ரட்டீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அடுத்து ஒரு படத்தை தனியாக இயக்க இருக்கிறார். இதனை அம்மா கிரியேஷன் சிவா தயாரிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' டீசர் சாதனையை முறியடித்த 'கேஜிஎப் 2' டீசர்'மாஸ்டர்' டீசர் சாதனையை ... பள்ளிகள் திறக்காத சூழலில் தியேட்டரில் 100 சதவீதம் அனுமதி முடியாது : ஐகோர்ட் பள்ளிகள் திறக்காத சூழலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

வால்டர் - Chennai,இந்தியா
11 ஜன, 2021 - 16:26 Report Abuse
வால்டர் அது என்ன நவீன் முகமத் அலின்னு பேரு? ஒன்னு நவீன்னு பேரு வையி இல்ல முகமத் அலின்னு பேரு வையி.
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
09 ஜன, 2021 - 18:27 Report Abuse
R KUMAR இந்த விஷயம் தெரியாமல், பைத்யம் போல அலைந்துகொண்டிருந்தேன். இனிமேல் சரியாகிவிடும். நாட்டின் பொருளாதாரமும் நிலையாகிவிடும். கவலையில்லை.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
10 ஜன, 2021 - 16:20Report Abuse
Loganathaiyyan1000% சரியான வார்த்தைகள். அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கின்றது இதில் எவளுக்கோ எவனுடனோ கல்யாணம் ஆச்சாம் இது ஒரு பெரிய தகவலாம் நமது ஜீ டி பி 10% ஆன மாதிரி????நாராயாணா நாராயாணா இந்த டப்பாவிற்கு மீடியாவில் ஒரு குறையும் இல்லை...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09 ஜன, 2021 - 17:14 Report Abuse
madhavan rajan அந்த ரகசியம் தெரியாததால் நாட்டில் பல பேர் தலையைப் பிய்த்துக்கொண்டு பைத்தியமாக அலைகிறார்கள். அவர்கள் துயரைப் போக்குவதற்கு இதுபோன்ற செய்திகளை அடிக்கடி போடவும்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09 ஜன, 2021 - 02:48 Report Abuse
J.V. Iyer சந்தோஷமாக இருங்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
08 ஜன, 2021 - 12:48 Report Abuse
Dhamodharan Sunderamoorthy love jigath
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
09 ஜன, 2021 - 14:12Report Abuse
vadiveluஜீசஸ் ஆசீர்வதிக்கட்டும், சாக்ரடீஸ் நம்பிக்கை கொடுக்கட்டும்....
Rate this:
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
10 ஜன, 2021 - 13:37Report Abuse
Anbu TamilanGod only knows these dramas...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in