ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | துல்கர் 40 : எஸ்.ஜே சூர்யா வெளியே... மிஷ்கின் உள்ளே... | எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ் |
சென்னை : தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது, தற்கொலை அல்ல கொலைக்கு சமமானது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பரவல், ௧,௦௦௦க்கு கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதற்கிடையே, பிரிட்டனில், மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகம் வந்த, 24 பேருக்கு, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த, 20 பேரும் பாதிக்கப்பட்டனர். இதில், நான்கு பேர், மரபணு மாறிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திரையரங்குகளில், 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கலுக்கு புதிய படங்கள் வெளியாவதை தொடர்ந்து, அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும், தேசிய தொற்று நோய் பரவியல் விஞ்ஞானி, பிரதீப் கவுர், டுவிட்டர் பதிவில், தனிமனித இடைவெளி இல்லாமல், மூடிய அரங்கில் இருந்தால், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும். இத்தகைய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். மேலும் திரைப்பிரபலங்கள் சிலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பேஸ்புக் பதிவு : அன்புக்குரிய நடிகர்கள் விஜய், சிலம்பரசன் மற்றும் தமிழக அரசுக்கு... என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என, கொரோனா முன்கள பணியாளர்கள், தற்போதைய சூழலில் சோர்வடைந்து இருக்கிறோம்.
எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சு விட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பெருந்தொற்று பாதிப்பில் இருக்கிறோம். இந்த அசாதாரணமான சூழலில், தொற்றை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனாலும், முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.
தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. இதில், வேடிக்கை என்னவென்றால், ஆட்சியாளர்களோ, அரசியல் தலைவர்களோ, நடிகர்களோ, மக்களோடு, மக்களாக கூட்ட நெரிசலில் படம் பார்க்க, திரையரங்கம் செல்லப் போவதில்லை. எனவே, பணத்திற்காக, மனித உயிர்களை பணயம் வைக்க வேண்டாம். இந்த அனுமதியை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.