'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சென்சார் கடந்த மாதம் நடந்து முடிந்தது.
படத்திற்கு 'யு-ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், வசனங்களை நீக்கினால் 'யு' சான்றிதழ் வழங்கப்படும் என சென்சாரில் சொன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் 'யு-ஏ' சான்றிதழே போதும் என சம்மதித்து வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
இருப்பினும் சில கெட்ட வார்த்தைகள், சில வன்முறைக் காட்சிகள் ஆகியவற்றை நீக்கிய பிறகே படத்திற்கு 'யு-ஏ' சான்றிதழைக் கொடுத்திருக்கிறார்கள். சென்சாரில் நீக்கப்பட்ட இந்தக் காட்சிகளின் விவரங்களும், மாற்றப்பட்ட சில காட்சிகளின் விவரங்களும் அடங்கிய சான்றிதழ் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
படத்தின் மொத்த நீளம் 178 நிமிடங்கள். அதாவது மூன்று மணி நேரத்திற்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே குறைவு. கடந்த சில வருடங்களில் மூன்று மணி நேரப் படங்கள் வெளியீட்டிற்குப் பிறகு படம் நீளம் என்று விமர்சனங்கள் வந்த பிறகு குறைக்கப்பட்டிருக்கின்றன.
இது விஜய் படம் என்பதால் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை. விஜய் படம் என்றால் முப்பது மணி நேரம் கூடப் பார்க்கத் தயார் என அவர்களது ரசிகர்கள் சொல்வார்கள்.