நீளமான தலைப்பில் 3 காதல் கதை | இரட்டை வேடத்தில் நடிக்கும் தினேஷ் | ரெட்ரோ பட வாய்ப்பு : மனம் திறந்த பூஜா ஹெக்டே | முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு | ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா | விஜய்யுடன் போட்டி நடனம் ; சாய் பல்லவி விருப்பம் | திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி |
பிரதமர் மோடிக்கு, நடிகர் உதயா ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும், 'செக்யூரிட்டி' குறும்படம், பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். போர்க்களத்தில் சண்டையிடும் போது, வீர மரணமடைந்த நம் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, பரம்வீர் சக்ரா விருதை, இந்தாண்டு குடியரசு தினத்தன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் பழனிக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார். கோரிக்கை மனுவின் நகலை, தமிழக பா.ஜ., தலைவர் முருகனிடம் வழங்கினார்.