சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் ஜோடி விசேஷமான நாட்களில் ஜோடி, ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களின் வயிற்றெரிச்சலை லேசாகக் கொட்டிக் கொள்கிறார்கள்.
கொரானோ காலத்திலும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்ட இந்த காதல் ஜோடி இன்றைய புத்தாண்டிலும் நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்டு பொறாமைப்பட வைத்துள்ளது.
புத்தாண்டு வாழ்த்துகளுடன் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு “என்னிடமிருந்தும் என்னவளிடமிருந்தும், உங்களுக்கும், உங்கள் அனைவருக்காகவும்,” என வாழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.
கடந்த சில வருடங்களாகவே காதலில் மூழ்கியுள்ள இந்த காதல் ஜோடி இந்த வருடமாவது திருமணம் செய்து கொள்ளுமா அல்லது காதலைத் தொடருமா என்பது மிகப் பெரும் சஸ்பென்ஸ்தான்.