பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். இதில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூலை ஜார்ஜியா நாட்டில் 3 மாதம் நடத்திவிட்டு திரும்பியிருக்கிறது இரண்டாம் உலகம் யூனிட். பட யூனிட்டிடம் விசாரித்த வகையில் இரண்டாம் உலகம் பற்றி கிடைத்த சில தகவல்கள்.
* படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
* செல்வராகவன் எழுதிகிட்டு போன ஸ்கிரிப்டை அந்த நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி எடுத்திருக்கிறார்.
* படத்தின் பட்ஜெட் 50 கோடி.
* தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
* சரித்திரமும், இன்றைய காலகட்டமும் கலந்த பேண்டஸி கதை.
* படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கென்றே தனி பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார்கள்.
* அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது.