விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
100 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்த ராம.நாராயணன் இன்னொரு சாதனையும் படைத்திருக்கிறார். அது மலேய மொழி படம் இயக்கிய முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமைதான் அது.
மலேசியாவில் உள்ள சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மலேசியாவுக்கு சென்று மலேய மொழியில் படம் இயக்கி கொடுத்திருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த நாபு, லிசா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். காதலியை கவர்வதற்காக கதாநாயகன் நடத்தும் நாடகங்களும், அந்த குட்டு வெளிப்பட்டு நாயகி வைக்கும் ஆப்புகளும்தான் கதை. கமெடி படமாக இதை உருவாக்கி இருக்கிறார் ராம நாராயணன். சுந்தர்.சி பாபு இசை அமைத்துள்ளார், படத்தில் பாடல்கள் கிடையாது.
படத்தின் பெயர் சிந்தாபுருவா தமிழில் காதல்கரடி என்று பொருள். இது ராம நாராயணனுக்கு 126வது படம். ராம நாராயணன் இயக்கும் 9வது மொழிப்படம் கடந்த வாரம் மலேசியாவில் வெளியாகி -ஓரளவுக்கு லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளதால். அதனால் மேலும் சில படங்கள் இயக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். தமிழில் அவர் இயக்கி வெற்றி பெற்ற படங்களை மலேய மொழியில் இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.
குரங்கு, யானை, நாயை எல்லாம் ப்ளைட்டுல ஏத்துங்க சார்...