தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
1981ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை படம் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை 18 வயதே ஆன சினேகா பிரிட்டோ இயக்குகிறார். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் 3 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகச் சிறிய வயதில் இயக்குனராகும் முதல் பெண் இயக்குனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒரு இருட்டறை படக்குழு சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் டேலண்ட் ஹண்ட் என்ற பெயரில் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி குறித்து டைரக்டர் சினேகா பிரிட்டோ கூறும்போது, நான் சிறு வயதிலிருந்தே என்னுடைய தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் சித்தப்பா விஜய் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளேன். இதனால் எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதையே, என் பெற்றோரிடமும் கூறினேன். எனது பெற்றோர்கள் அதற்கு சம்மத்தித்து என்னை இயக்குனராக ஆக்கியுள்ளனர். ஆனால், என்போல் திறமை இருந்தும் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.