‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சுனைனா நடித்துள்ள, "திருத்தணி படம், "ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே, "நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நடிக்க, சுனைனா ஒப்பந்தமாகி உள்ளார். "காமராசு, அய்யா வழி ஆகிய படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன், வைகுண்டா பிலிம்சுக்காக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் இது. இதில், ஸ்டன்ட் மாஸ்டர், ஜாக்குவார் தங்கத்தின் இளைய மகன் ஜெய்ஜித், கதாநாயகனாக அறிமுகமாகிறார். சவுந்தர்யன் இசையமைக்க, கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிள்ளைகளை படிக்க வைத்து, பட்டதாரியாக மாற்றும் பெற்றோர், அவர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதிப்பது வரை காத்திருக்காமல், பொறுமை இழக்கின்றனர். இதனால், இளைஞர்களின் வாழ்க்கை, எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற, எதார்த்தமான உண்மையை பதிவு செய்கிறார், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். படத்தில், நாயகி சுனைனா, "கொஞ்சம் நடிப்பு; கொஞ்சம் கிளாமர் என்ற புதுக் கொள்கையோடு, களம் இறங்கி உள்ளதால், இனி சுனைனாவின் கை, ஓங்கியே இருக்கும் என்கிறார், இயக்குனர்.