வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ராஜ்பாரவிசங்கர் என்பவர் மருந்து மொத்தவியாபாரி. அவருக்கும் சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு அஜந்தா என்ற படத்தை தயாரித்தார். அதை திருமாவளவன் என்பவர் இயக்கினார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாரானது. இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் என்ற தமிழக அரசின் விருதையும் பெற்றார். ஆனால் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கருக்கும், இயக்குனர் திருமாவளவனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ராஜ்பா ரவிசங்கர் இயக்குனரை நீக்கிவிட்டு தானே இயக்குனர் என்று விளம்பரம் செய்தார். இதனை எதிர்த்து திருமாவளவன் இயக்குனர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்க்திலும் முறையிட்டார். இரு சங்கமும் பஞ்சாயத்து பேசி இயக்குனர் என்று திருமாவளவன் பெயரைத்தான் போட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
இந்தக் கோபத்தில் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கரும் படத்தை வெளியிடாமல் கிடப்பில் போட்டார். பின்னர் தெலுங்கில் வெளியிட்டார். அங்கு படம் பெருசாக போகவில்லை. இப்போது தமிழில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இயக்குனர் என்று தனது பெயரையும் திருமாவளவன் என்ற பெயரை திருமால் என்று சுருக்கி போட்டும் படத்தை வெளியிடுகிறார். படம் பார்க்க வருகிறவர்கள் படத்தின் பேப்பர் விளம்பரத்தை கொண்டு வந்தால் அவர்களுக்கு டிக்கெட் விலை 20 ரூபாய் என்றும், சனி ஞாயிற்று கிழமையில் டிக்கெட்டின் விலை வெறும் பத்து ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறார். அஜந்தாவின் தமிழ் பதிப்பில் ரமணா நடித்துள்ளார். மற்ற மொழிகளில் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். வந்தனா குப்தா என்ற மும்மை மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார், சுமார் 5 கோடியில் தயாரன இந்தப் படம் இப்போது வெளிவருகிறது.
படத்தின் கதை இதுதான். ஒரு மேடைப்பாடகனுக்கு சினிமாவில் பாடகராக வேண்டும் என்று ஆசை. ஒரு கோவிலில் பாடும்போது அங்கு ஒரு பாடகியை சந்திக்கிறார். அவள் பேரழகி, நன்றாக பாடுவள் ஆனால் பார்வைதிறன் அற்றவள். அவளுக்கு பார்வை திரும்புவதற்காக இவன் பாடி பாடி சம்பாதிக்கிறான். சினிமாவில் பெரிய பாடகனாகிறான். அவளது கண் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லும்போது விமான விபத்தில் இறந்து விடுகிறான். பார்வை திரும்பும் இவள் அவனை பார்க்க விரும்புகிறாள். இப்படி 80களில் எல்லோரும் துவைத்து காயப்போட்ட கதைதான் இது. இதன் இயக்குனர் திருமாவளவன் அதன்பிறகு வெண்மணி என்ற படத்தை எடுத்து அதன் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டத்தை கொடுத்தவர். இந்த தயாரிப்பளர் பத்து ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் படத்தை வெளியிடுகிறர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க சாமி....