‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான படம் "தில்லு முல்லு". வித்தியாசமான கதாபாத்திரத்தில் இரட்டை வேஷம் போட்டுக்கொண்டு காமெடியில் அசத்தியிருந்தார் ரஜினி. முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தப்படம் அதேப்பெயரில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ரஜினியாக தமிழ்படம் சிவா நடிக்க, அவருக்கு ஜோடியா இஷா தல்வார் நடிக்கிறார். "வீராப்பு", "தம்பிக்கு எந்த ஊரு" படங்களின் டைரக்டர் பத்ரி இயக்குகிறார். வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் பெரிய ஹைலைட்டாக முன்னாள் மற்றும் இந்நாள் இசையமைப்பாளர்கள் இருவர் சேர்ந்து இசையமைக்க உள்ளனர். அதில் ஒருவர் தமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். மற்றொருவர் தற்போது பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன்சங்கர் ராஜா. முன்னதாக இதேப்போல் 1986-ல் ஏ.வி.எம்.மின் தயாரிப்பில் வெளிவந்த மெல்ல திறந்தது கதவு படத்திற்காக, எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றினர். அவர்கள் கூட்டணியில் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
இப்போது அதேப்போல் எம்.எஸ்.வி.யும், இளையராஜாவின் வாரிசும் இணைந்து பணியாற்ற இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒருவித பரபரப்பையும், அதேசமயம் ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு லஷ்மண் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். ஆகஸ்ட் 24ம் தேதி படத்தின் பூஜை ஆரம்பமாகி தொடர்ந்து ஷூட்டிங் செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது.