போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
செல்வராகவனின் குரூப்பிலிருந்து வெளிவந்த பிறகு ஆன்ட்ரியாவுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. முன்பு அவரை அணுக தயங்கியவர்கள். இப்போது தாராளமாக அணுகுகிறார்கள். ஆன்ட்ரியாவும் பொறுமையாக கதைகேட்டு வருகிறார். கமலின் விஸ்வரூபத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் தமிழில் புதிய படத்தில் புதிய சம்பளத்துடன் கமிட் ஆவது என்ற முடிவில் இருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்துள்ள புதிய திருப்பங்கள் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதில் பத்திரிகையாளராக நடித்துள்ள ஆன்ட்ரியா. ஒரு ரகசிய செய்தி சேகரிப்பதற்காக பாலியல் தொழிலாளியாக வேஷம் கட்டுகிறாராம். இதில் தாராளமாக கவர்ச்சியும் காட்டியிருக்கிறாராம்.
இதற்கிடையில் அன்னாயும் ரசூலும் என்ற மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஆன்ட்ரியாவின் கால்ஷீட்டுக்காக மலையாளத்தில் 5 படங்கள் வரை காத்திருப்பில் இருக்கிறது. தமிழில் சில புதுமுக இயக்குனர்கள் உள்பட பத்து பேரிடம் கதை கேட்டிருக்கிறார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பது என்பதை டிக் செய்வாராம் ஆண்ட்ரியா.