ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க குணசித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். கேரளாவின் பாரம்பரிய மிக்க மன்னர் குடும்பத்தில் பிறந்தவர். கலை ஆர்வமிக்க இவர் சினிமாவிற்கு நடிக்க வந்தார். குறுகிய காலத்திலேயே பெரிய புகழைப் பெற்றார். எல்லா ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தார். யுத்தம் செய் படத்தில் தன் அழகான ஆறடி கூந்தலை களைந்து மொட்டை அடித்து நடித்தார். திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் கொண்ட லட்சுமி தன் கணவர் ராமகிருஷ்ணன் தயாரிப்பில் ஆரோகணம் என்ற படத்தை இயக்கினார். ஒரு ஏழைத் தாய்க்கும் அவள் பிள்ளைகளுக்குமான உறவைச் சொல்லும் படமாக அதை உருவாக்கினார்.
இந்தப் படத்தை இயக்கும் காலத்தில் வந்த சுமார் 20 பட வாய்ப்புகளை தவிர்த்தார். நல்ல சம்பளத்துடன் வந்த விளம்பரப் படங்களிலும் நடிக்கவில்லை. இப்போது ஆரோகணம் படம் தயாராகி விட்டதால், மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார். இதுகுறித்து லட்சுமி கூறும்போது "படம் இயக்கினாலும் நடிப்புதான் எனக்கு முக்கியம். படம் பாதிக்கப்படகூடாது. கவனம் சிதறக்கூடாது என்பதற்காக படம் இயக்கும் காலத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இப்போது திருப்திகரமாக நான் நினைத்த மாதிரியே படம் வந்திருக்கிறது. இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். ஆரோகணம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்போது மீண்டும் படம் இயக்குவேன்" என்றார்.