'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
கிருஷ்ணா நடித்து வரும் படம், "வானவராயன் வல்லவராயன்! ராஜமோகன் இயக்கும் இந்த படத்தில், மோனல் கஜர் என்ற மிஸ் குஜராத் பட்டம் பெற்ற அழகி, தமிழில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டதாக சொல்லும் மோனல் கஜர், தமிழில் கிருஷ்ணாவுடன் நடிக்கும் படத்தை அடுத்து, ஜீவா, விமல் போன்ற ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். அவரிடம், "தமிழில் உங்களது பிரவேசம் எந்த மாதிரி இருக்கும்? எனக் கேட்டால், ஹன்சிகா மோத்வானிக்கும், எனக்குமிடையே தெலுங்கில் நடித்த போதே, போட்டி துவங்கி விட்டது. இப்போது நானும் தமிழுக்கு வந்திருப்பதால், எங்களுக்கு இடையிலான போட்டி, இன்னும் அதிகமாக இருக்கும். அதனால், தெலுங்கில் நடித்ததை விட, அதிரடி புயலாக உருவெடுத்து மார்க்கெட்டில் ஹன்சிகாவை முந்திச் செல்வேன் என்கிறார் மோனல் கஜர்.