ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி 950க்கும் அதிகமான பாடலாசிரியர்கள் பேனா பிடிச்ச தமிழ் திரை உலகத்துல முன்னணி பாடலாசிரியர்ங்கற அந்தஸ்தை பெற்ற மிகச்சிலர்ல இவரும் ஒருத்தர். அறிமுகமாகி 13 வருஷத்துல 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதிக் குவிச்சு இருக்கற எழுத்து எந்திரம் நா.முத்துக்குமார். மெட்டைக் கேட்ட உடனே வந்து விழுற பாடல்வரிகள் மாதிரி, நாம கேள்விகளை கேட்டு முடிச்சவுடனே அதிரடியா வந்து விழுது... முத்துக்குமாரோட அழகான பதில்கள்.
கவிஞருக்கும் பாடலாசிரியருக்குமான வித்தியாசம்?
கவிதைங்கறது ஒத்தையடிப்பாதை மாதிரி. பாதையையும், இலக்கையும் நம்ம விருப்பப்படி அமைச்சிக்கலாம். ஆனா, சினிமா பாடல்... தண்டவாளத்து மேல பயணிக்கிற மாதிரி. தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தடம் புரளாம பயணிக்கனும்.
ஹாலிவுட் படங்களில் பாடல்கள் இல்லாதபோது, இந்திய படங்களில் தேவையா?
தாலாட்டுல இருந்து ஒப்பாரி வரைக்கும் பாடல்கள் வழியா வாழ்க்கையை சொல்றது தான் நம்ம பாரம்பரிய பழக்கம். உலக அளவுல இந்திய திரைப்படங்களோட அடையாளமே பாடல்கள்தான். இது இல்லைன்னா நம்மோட தனித்துவமே போயிடும்.
ஒரு நல்ல பாடலுக்கான வரிகள் எப்படி இருக்க வேண்டும்?
வார்த்தைகள் எளிமையா இருக்கணும். தேவைப்படுற இடங்கள்ல அழகும், கம்பீரமும் அந்த வார்த்தைகளோட கை கோர்க்கணும். எங்கேயோ பார்த்த காட்சியை, எப்போதோ அனுபவித்த உணர்வை ஞாபகப்படுத்தி கேட்கறவங்களை தொந்தரவு பண்ணனும்.
திரையிசை பாடல்கள் தவிர்த்து வேறு இலக்கிய முயற்சிகள்?
நான் பிறந்து வளர்ந்த காஞ்சி மாநகரத்தோட 600 ஆண்டுகால வரலாற்றை பத்தி பல ஆராய்ச்சிகள் பண்ணி, கடந்த பத்து வருடங்களா நான் எழுதிட்டு இருக்கற ஆங்கில நாவலான சில்க் சிட்டியை சீக்கிரமே வெளியிடற முயற்சியில மும்முரமா இறங்கி இருக்கேன்.
வருமானத்தைத் தவிர பாடலாசிரியர் பணி வழங்கியது?
சத்தம் போடாதே படத்தோட பேசுகிறேன் பாட்டை கேட்டுட்டு தற்கொலை முயற்சியை கைவிட்டதா சொன்ன பெண்ணோட கண்ணீர் கலந்த நன்றி. உங்க பாடல்வரிகளை பாடித்தான் எங்க பிள்ளைங்க தமிழ் கத்துக்கறாங்கன்னு வெளிநாடுவாழ் தமிழர்கள் சொன்னபோது கிடைச்ச பெருமிதம் என்றார்.