ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கதைக்கும்; தன்னுடைய கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பது' என முடிவெடுத்திருக்கும் நடிகை நயன்தாரா, அவ்வப்போது, பிரபல ஹீரோக்கள் படங்கள் என்றால், எந்த கண்டிஷன்கள் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
சமீபத்தில் வெளியாகி பெரிதாகப் பேசப்பட்ட '96' படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்த த்ரிஷா, படம் பெரும் வெற்றி பெற்ற பின், நடிகை நயன்தாராவின் கொள்கையோடு ஒத்துப் போய், தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே இனி நடிப்பது என முடிவெடுத்து விட்டார்.
அதே பாணியை கடைபிடிக்க நடிகை ஹன்சிகாவும் முடிவெடுத்து விட்டார். ஆனால், நயன்தாரா, த்ரிஷா போல சம்பளமாக அதிக பணம் கேட்பதில்லை என முடிவெடுத்துள்ளதால், தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவை படத்தில் நடிக்க வைக்க தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தன்னுடைய கேரக்டருக்கும் வேண்டும் என்கிறார் ஹன்சிகா.