என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநர் மிஷ்கின். இவர், புதுமுக நடிகர் மைத்ரேயாவை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மிஷ்கின் சொன்னபடி படம் எடுக்கவில்லை, மாறாக அதே கதையை உதயநிதியை வைத்து சைக்கோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மைத்ரேயா, மிஷ்கினுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னை வைத்து படம் இயக்குவதாக சொல்லிய மிஷ்கின், உதயநிதியை வைத்து படம் எடுப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயா, மிஷ்கின் உடன் படம் பண்ண 2015ம் ஆண்டில் ஒப்பந்தோம் போட்டோம். இதற்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி, ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்தோம். துப்பறிவாளனுக்கு முன்பே படம் பண்ண வேண்டியது. ஆனால் பண்ணவில்லை, துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது சத்தியம் செய்தார். ஆனால், இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேச பலமுறை அழைத்து வரவில்லை. அதனால் தான் கோர்ட் வரை செல்லும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விஷாலை சந்திக்க நேர்ந்தது, அவர் உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்றார்.