சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

பல படங்களில் திறமையாக நடித்தாலும் இன்னும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முடியாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் காயத்ரி. தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக மகாமனிதன் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் வெள்ள ராஜா என்ற வெப் சீரிசிலும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
வெப் சீரிஸ் என்பது சினிமாவுக்கு மாற்றல்ல. சினிமாவின் இன்னொரு பரிமாணம். பல மணி நேரம் செலவு செய்து தியேட்டருக்கு போக முடியாதவர்களுக்கு இது ஒரு களம்.
வெளிநாடுகளில் எப்போதோ வந்துவிட்டது. நம்நாட்டில் இப்போதுதான் வந்திருக்கிறது. வெப் சீரிஸ் பெருகினாலும், சினிமாவுக்கான ஆடியன்ஸ் எப்போதும் இருப்பார்கள்.
வெள்ள ராஜாவில் நான் வழக்கறிஞராக நடிக்கிறேன். இயற்கை வளங்களை காப்பாற்ற கார்பரேட் கம்பெனிகளை எதிர்த்து போராடுகிற துணிச்சலான கேரக்டர். நடிக்கிறதுக்கு நிறைய இடம் இருக்கு. வெப் சீரிசில் நடித்தாலும் சினிமாதான் என் பர்ஸ்ட் சாய்ஸ். இரண்டிலும் பயணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக இரண்டையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை. எந்த வடிவிலாவது ஆடியன்சுக்கிட்ட நாம போய் சேரணும். அதுதான் முக்கியம். என்கிறார் காயத்ரி.