ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
2002ல் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, வெளியான படம் ரமணா. இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் தாகூர் என்ற பெயரில் ரீமேக் ஆனது. வி.வி.நாயக் இயக்கினார். ஜோதிகா, ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்கில் நடித்திருந்தனர்.
தற்போது சைர நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடித்து வரும் சிரஞ்சீவி, அடுத்தபடியாக கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படமும் ரமணா பாணியிலான சமூக பிரச்சினையை தழுவிய கதையில் உருவாகிறதாம். தற்போதைய நாட்டு நடப்புகளை கோர்த்து ஒரு கதை பண்ணயிருக்கிறாராம் கொரட்டல்ல சிவா. அதனால் இந்த படத்திற்கு தாகூர்-2 என்று டைட்டில் வைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.