இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பொதுவாக மலையாளப் படங்கள், தமிழ்நாட்டில் மலையாள மொழியிலேயே தான் வெளிவரும். காரணம் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் தான் மலையாளப் படங்களை பார்ப்பார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழ் படங்களை கேரள மக்கள் விரும்பி பார்ப்பதைப்போல, மலையாளப் படங்களை தமிழ் மக்களும் விரும்பிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு தற்போது மலையாளத்தில் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படங்களும் தயாராகத் தொடங்கிவிட்டன.
புலிமுருகன், காயங்குளம் கொச்சுண்ணி போன்ற படங்கள், தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்து வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஒடியன். மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், இன்னோசென்ட், சித்திக், மனோஜ் ஜோஷி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.ஜெயச்சந்திரன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார், ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கி உள்ளார். ஆஷீர்வாத் சினிமா சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
இது பாலக்காடு மாவட்டத்தை பூர்வீமாக கொண்ட நாட்டுப்புற கலையை தெய்வமாக மதிக்கும் ஒடியன் சமூகத்தை பின்னணியாக கொண்ட கதை. பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. மோகன்லால் ஒடியன் மணிக்காயன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
பெரும்பகுதி படபிடிப்பிடிப்பு ஒடியன் மக்கள் வாழும் பாலக்காடு மாவட்டத்தில் நடந்துள்ளது. 145 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 14ந் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. சென்னையில் மட்டும் 20 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.