பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
விஜய் சேதுபதியை வைத்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தை இயக்கியுள்ளார்.
சீதக்காதி டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்து வருகிறார். இவர்களுடன் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நாயகியான ரம்யா நம்பீசனும் நடித்துள்ளார். பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்துக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்' உள்ளிட்ட படங்களுக்கு மேக்கப் மேனாகப் பணியாற்றிய கேவின் ஹானோ இப்படத்தில் மேக்கப்மேனாக பணியாற்றியுள்ளார்.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது தான் இப்படத்தின் ஒருவரிக்கதை. அதாவது மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக சீதக்காதி தற்கொலை செய்து கொள்வது போல் இப்படத்தின் க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?