ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
தமிழ் சினிமாவில் அடுத்த வளரும் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறார். அவர் இயக்குனராக அறிமுகமான 'கோமாளி' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து அவரே கதாநாயகனாக நடித்து இயக்கிய 'லவ் டுடே' படம் 100 கோடி வசூலைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது.
அதற்கடுத்து இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'டிராகன்' படம் 150 கோடி வசூலைப் பெற்று இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. அடுத்து தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'டியூட்' படம் நேற்று முன்தினம் வரையில் 66 கோடி வசூலைப் பெற்றிருந்தது. நேற்றைய தீபாவளி நாளிலும், இன்றைய விடுமுறை நாளிலும் சேர்த்து இப்படம் 100 கோடியைக் கடந்துவிடும்.
நாயகனாக அறிமுகமாகி நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் பெறுவது தமிழ் சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு கதாநாயகனுக்கும் நடக்காத ஒன்று. அது பிரதீப் ரங்கநாதனுக்கு நடக்கப் போகிறது.
பிரதீப் நடித்து அடுத்து டிசம்பர் 18ம் தேதி 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் வெளியாக உள்ளது. அந்தப் படமும் 100 கோடி வசூலித்தால் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி வசூல் பெற்ற முதல் நாயகன் என்ற சாதனையும் புரிய வாய்ப்புள்ளது.