இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது.
இப்படம் உலகம் முழுக்க வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
படம் வெளியான 10 மணிநேரத்தில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். சமீபகாலமாக ஒவ்வொரு படங்களையும் சவால் விட்டு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் 2.0 படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸை ஒழிப்போம் என தமிழ் திரையுலகம் சபதம் ஏற்றுள்ளது. இதை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால் எந்த பயனும் இல்லை. படங்கள் ஒவ்வொரு வாரமும் இணையதளங்களில் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றன. அதிலும் பெரிய நடிகர்களின் படங்களை சவால் விட்டு வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான 2.0வும் தப்பவில்லை என்பது அதிர்ச்சி கலந்த உண்மை.