'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, வேதாரண்யம், பட்டுகோட்டை போன்ற பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் புயலால் பாதித்த இடங்களுக்கு சென்ற நடிகர் பிரஷாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த செய்தி வெளியில் தெரியவில்லை. ரசிகர் ஒருவர் போட்டோ வெளியிட்டதன் மூலமே இந்த செய்தி தெரியவந்துள்ளது. மேலும் அங்கு இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுடன் பிரஷாந்த் விரும்பி புகைப்படமும் எடுத்து கொண்டார்.