ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமூக வலைத்தளங்களோ, யு டியுபோ அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்தான் சாதனைகளை உருவாக்குபவர்கள் என்பதை 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் மீண்டும் நிரூபித்துள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று இரவு திடீரென விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை யு டியூபில் வெளியிட்டார்கள். போஸ்டரின் கடைசியில் மட்டும் அஜித்தின் இரண்டு விதமான தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கே அஜித் ரசிகர்கள் யு டியூபை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை வெளிவந்த மோஷன் போஸ்டர்களிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற சாதனையை இந்த மோஷன் போஸ்டர் புரிந்துள்ளது. இன்று காலை 11 மணி வரை 2,86,000 லைக்குகள் கிடைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது.
2.0 படத்தின் எந்திர லோகத்து பாடல் வீடியோ வெளிவந்தும் அதை டிரென்டிங்கில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது விஸ்வாசம் மோஷன் போஸ்டர். பொங்கலுக்கு எந்த பேட்ட, ராஜா வந்தாலும் விஸ்வாசமான ரசிகர்கள் இருக்கும் வரை விஸ்வாசம் படத்திற்கு எந்த ஒரு பிரச்சினையும் வர வாய்ப்பில்லை.