ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வெளியீட்டு விதிமுறைகளின்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும், 3வது வாரமும் சிறு பட்ஜெட் படங்கள் வெளிவர வேண்டும். அதன்படி வருகிற 23ந் தேதி 6 சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகின்றன.
கடந்த வாரம் வந்திருக்க வேண்டிய நகுல் நடித்த செய் என்ற படம். திமிருபுடிச்சவன் வெளிவந்ததால் வெளிவராமல் தள்ளிப்போனது. அந்தப் படம் 23ந் தேதி வெளிவருகிறது. இதுதவிர விமல், சாந்தினி நடித்த வண்டி, சின்னத்திரை பாடகர் செந்தில் நடித்த கரிமுகன், புதுமுகங்கள் நடித்த கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும், சகவாசம், வினை அறியார் ஆகிய 6 படங்கள் வெளிவருகின்றன.
இந்த படங்கள் தவிர ராபின்ஹூட், தி கேர்ள் இன் தி ஸ்பைடர்ஸ் வெப் என்ற இரண்டு ஹாலிவுட் படங்கள் வெளிவருகின்றன. இந்தப் படங்கள் தமிழிலும் ரிலீஸாகின்றன. 6 சிறு பட்ஜெட் படங்களில் செய், மற்றும் வண்டி படங்கள் மட்டும் 200 தியேட்டடர்களுக்கு அதிகமாகவும், மற்ற படங்கள் 50 முதல் 100 தியேட்டர்களில் வெளிவருகின்றன. கடைசி நேரத்தில் இதில் மாற்றங்கள் வரலாம்.