‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சத்யராஜ் சோலோ ஹீரோவாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பெரிய நடிகர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். அவர் கடைசியாக ஒரு நாள் இரவில் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். சமீபத்தில் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் படத்தில் ஹீரோ போன்ற கேரக்டரில் நடித்தார். இப்போது தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் பெண்களுக்காக போராடும் சமூக போராளியாக நடிக்கிறார். ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார். ஹனீபீ கிரியேஷன் சார்பில் சஜீப் மீரா தயாரிக்கிறார். தீரன் என்ற புதுமுகம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் . உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட கதை. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. ஆக்ஷன் திரில்லர் வகை படம். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஒரு இளம் ஹீரோ, ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். என்றார்.