நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

தொண்ணூறுகளில் இருந்தது போல, சமீப வருடங்களாக வெளியாகும் படங்களில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை என்பது நிதர்சனம். முன்பெல்லாம் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் என்றால் விஜயசாந்தி, அவரை தொடர்ந்து வாணி விஸ்வநாத் ஆகியோர் தொடர்ந்து அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார்கள்.
தற்போது அந்த இடம் நடிகை பூர்ணாவுக்கு சென்றுவிட்டது போலத்தான் தெரிகிறது. காரணம் இந்த வருடம் மலையாளத்தில் மம்முட்டியுடன் போலீஸ் கேரக்டரில் பூர்ணா நடித்த 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து போலீஸ் கேரக்டர்களாக அவரை தேடி வருகின்றன.
அந்தவகையில் தற்போது விமல் நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு' மற்றும் 'புளூவேல்' ஆகிய படங்களிலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் பூர்ணா. கொடிவீரன் படத்திற்காக அவர் மொட்டையடித்து, அதன்பின் பாப் கட்டிங் அளவுக்கு முடி வளர்ந்திருந்தது. தற்போது இதே கெட்டப்பில் தான் அனைத்து போலீஸ் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் பூர்ணா.