அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. அதன் பிறகு தகராறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டில் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து தன் கர்ப்பமாக இருந்தபோது மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் பூர்ணா.
இந்த நிலையில் நேற்று பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ள பூர்ணா, நாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.