டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்கிற பெயரில் நடித்து வருகிறார். தமிழில் பல படங்களில் துணிச்சலான நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இவர் தமிழ் திரையுலகில் நுழைந்த சமயத்திலேயே நடிகர் விஜய்யால் குட்டி அசின் என பாராட்டப்பட்டவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய பூர்ணா, கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்த தப்பித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவழியாக மீண்டு கடந்த ஜூன் மாதம் துபாயில் வசிக்கும் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார் பூர்ணா. இந்த நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளார் பூர்ணா. தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் இந்த சந்தோச செய்தியை பகிர்ந்துகொண்டுள்ள பூர்ணா, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்த இந்த சந்தோஷத்தை கொண்டாடிய நிகழ்வுகளை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பூர்ணாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.