Advertisement

சிறப்புச்செய்திகள்

என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛துணிவு' டிரைலர் வெளியீடு : தெறிக்க விடலாமா என ரசிகர்கள் கொண்டாட்டம்

31 டிச, 2022 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Thunivu-Trailer-out

வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பட அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என மூன்று பாடல்களை சில நாட்கள் இடைவெளி விட்டு அடுத்தடுத்து வெளியிட்டனர். இந்தபாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் போஸ்டர்களை நேற்று வெளியிட்டனர். அதில் மைப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பிரேமாக பிரேம், ராஜேஷாக பக்ஸ், கிரிஷ்-ஆக ஜாக் கொக்கன், ராதாவாக வீரா, முத்தழகனாக ஜிஎம் சுந்தர், ராமச்சந்திரனாக அஜய், தயாளனாக சமுத்திரகனி, கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று(டிச., 31) மாலை 7மணியளவில் டிரைலரை வெளியிட்டனர்.

1:51 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில், பிஸியான வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க அஜித் குழுவினர் நுழைகின்றனர். அங்குள்ளவர்களை பிணய கைதிகளாக பிடித்து வங்கியில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். போலீஸ் சுற்றி வளைக்க தேசிய அளவில் இந்த செய்தி பரபரப்பாகிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பது தெரிகிறது.

டிரைலரில் ஆக் ஷன், துப்பாக்கி, வெடி சத்தம் ஆகியவை கேட்டாலும் மங்காத்தா பாணியில் அஜித் செய்யும் சில மேனரிசங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. ‛‛மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறேயே வெட்கமா இல்ல என பிரேம் கேட்க அதற்கு அஜித் சிரித்து கொண்டே இல்ல என சொல்வது, ஹீரோ வேலைய நான் பாத்துக்குறேன், என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கை வைக்கலாமா...'' போன்ற வசனங்களில் அவர் சிரித்துக் கொண்டே பேசுவது ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக வங்கியில் துப்பாக்கி உடன் அவர் ஆடும் நடனம் வித்தியாசமான அஜித்தை பார்க்க வைத்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிரைலர் வெளியான 15 நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தது. தொடர்ந்து துணிவு பட டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் எத்தனை பாகங்களாக உருவாகிறது? - விஜயேந்திர பிரசாத் தகவல்ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் ... கர்ப்பத்தை அறிவித்த பூர்ணா கர்ப்பத்தை அறிவித்த பூர்ணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
01 ஜன, 2023 - 13:23 Report Abuse
Velayutharaja Raja it is like beast trailer
Rate this:
R Vijay - bangalore,இந்தியா
01 ஜன, 2023 - 13:23 Report Abuse
R Vijay பேங்க் கொள்ளை ஒரு பார்ட். நிறைய இருக்கு வாங்கி மோசடி பற்றி படத்lokesதில். அதுபோக பிரஸ்ட் கம்பர் பண்ண தேவை இல்லை நெல்சன் வேறு வினோத் வேறு வினோத் லோகேஷ் போல் கிரியேட்டிவ் உள்ள டைரக்டர் அப்படியெல்லாம் மொக்கையா எடுக்க வாய்ப்பே இல்லை. துணிவு பீ ஸ்டகுடும்ப படம் நா சம்சாரம் அது மின்சாரம் ரீமேக் னு சொல்லுற முடியுமா
Rate this:
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜன, 2023 - 07:13 Report Abuse
Shiva Looking like Beast Part 2
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜன, 2023 - 01:36 Report Abuse
BalaG பீஸ்ட் ஒரு மாலில் நடக்கும் கதை. இது ஒரு பாங்கில் நடக்கும் கதை. ஏன் ஒரே மாதிரி ட்ராக்-ஐ ஒரே நேரத்தில் இவங்க ரெண்டு பேரும் follow பண்றாங்கன்னு தெரியல. பெரும்பாலான நேரங்களில் இப்படித்தான்..
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜன, 2023 - 00:56 Report Abuse
KayD Beast part 2
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in