சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார். தமிழில் பல படங்களில் துணிச்சலான நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இவர், தமிழ் திரையுலகில் நுழைந்த சமயத்திலேயே நடிகர் விஜய்யால் குட்டி அசின் என பாராட்டப்பட்டவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய பூர்ணா, கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்து தப்பித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவழியாக மீண்டு கடந்த ஜூன் மாதம் துபாயில் வசிக்கும் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பூர்ணா. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷமான செய்தியை தனது நண்பர்களுடன் கொண்டாடி அதை தனது யுடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டார் பூர்ணா. இந்த நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி தற்போது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களையும் தற்போது பூர்ணா பகிர்ந்து கொண்டுள்ளார்.