ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தொடர் சர்ச்சைகளுக்குப் பின், நடிகர் விஜய் நடித்த 'சர்க்கார்' படம், தீபாவளி நாளில் திரைக்கு வந்திருக்கிறது. அந்தப் படத்துக்கு, கூடுதல் காட்சிகளை திரையரங்குகள், ரீலிசாகும் நாளில் இருந்து இரு நாட்களுக்கு மட்டும் போட்டுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அனுமதி வழங்கியத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் 22 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட 'சர்க்கார்' படம், 74 ஸ்க்ரீன்களில் காட்டப்பட்டது. இப்படி காட்டப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கை மட்டும் 336. இப்படி அதிக அளவில் காட்சிகள் காட்டப்பட்டு, 'சர்க்கார்' திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இதே போல வெளியான திரைப்படங்களான 'கபாலி' 283 காட்சிகள், 'மெர்சல்' படம் 279 காட்சிகள், 'தெறி' படம் 265 காட்சிகள், 'விவேகம்' படம் 261 காட்சிகள், 'காலா' படம் 253 காட்சிகள் என திரையிடப்பட்டன. அந்த சாதனைகளை தற்போது, சர்க்கார் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.