ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தீபாவளிக்கு பரபரப்பாக வெளியாகி இருக்கும் அரசியல் கதையம்சம் உள்ளப் படம் 'சர்க்கார்'. 'இந்தப் படத்தை முதல் நாளில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டும்; அப்போதுதான், ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? படத்துக்கான உண்மையான வரவேற்பு ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும்' என, நடிகர் விஜய்யிடம் சொன்ன அவரது மனைவி சங்கீதா, 'சென்னைக்குள்ளேயே இருக்கும் தியேட்டர்களில் படம் பார்ப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அதனால், சென்னைக்கு வெளியே அல்லது புறநகரில் இருக்கும் ஒரு தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்' எனவும் கூறியிருக்கிறார்.
அதையடுத்து, படம் ரிலீஸ் ஆன, தீபாவளி நாளில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில், நடிகர் விஜய் குடும்பத்தினர், இயக்குநர் அட்லி குடும்பத்தினர் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அனைவரும், சென்னை, குரோம்பேட்டை, வெற்றி தியேட்டரில், விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்து வெளியே வரும்போது, விஜய்யின் மனைவி சங்கீதா, ரசிகர்கள் சிலரிடம் பேசி, அவர்கள் கருத்துக்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார்.