மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்துள்ள சர்கார் படம் சுமார் 750 தியேட்டரில் வெளியாகும்போது தங்களுடைய படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் சில படங்களின் ரிலீஸ் சில வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை தீபாவளி அன்று வெளியிடுவோம் என்று உறுதியாக அறிவித்தனர். ஆனால், படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. மறாக நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. பின்னர் தயாரிப்பாளருக்கும் விநிகோயஸ்தருக்கும் ஏற்பட்ட பிரச்சனையினால் திமிரு புடிச்சவன் படம் இம்மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையை பெற்ற விநியோகஸ்தர், ஏற்கனவே வெளியிட்ட சண்டக்கோழி-2 படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நேரத்தில் திமிரு புடிச்சவன் படத்தை வெளியிட்டால் மிகப்பெரிய பிரச்சனை வரும் என்பதால் படத்தை விஜய் ஆண்டனி இடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்தார்.
தற்போதைய தகவலின்படி திமிரு புடிச்சவன் படத்தை மீண்டும் அதே விநியோகஸ்தரிடமே டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் கொடுத்து படத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. காளி படத்தில் ஏற்பட்ட நஷ்டம் சம்மந்தப்பட்ட தொகையை விநியோகஸ்தருக்குக் கொடுத்தால் தான் திமிரு புடிச்சவன் படம் வெளியாகும் என்ற நிலையில் அதை கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.